திருச்சியில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சவாதிகள் என அய்யாக்கண்ணு விமர்சனம்

0 519

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு, மின்வாரிய அதிகாரிகளை லஞ்சவாதிகள் என விமர்சித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்பதாக அய்யாக்கண்ணு கூறியதற்கு மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், பொதுவெளியில் இதுபோன்று பேசக்கூடாது என்றும், லஞ்சம் வாங்கியவர்கள் குறித்து மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments