தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்மாற்றிகள் வாங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல்... தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்மாற்றிகள் வாங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் மீது
ஓராண்டு ஆகியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
2021-ஆம் ஆண்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, 2022-ஆம் ஆண்டில் 500 கிலோ வோல்ட்ஸ் ஆம்பியர் திறன் கொண்ட மின்மாற்றிகள் 12 லட்சத்து 49 ஆயிரத்து 800 ரூபாய் என்ற விலையில் மொத்தம் 800 மின்மாற்றிகளை வாங்கியதாக மின்வாரியம் தெரிவித்தது.
ஆனால், மத்திய அரசின் மின்னணு சந்தைத் தளத்தில் மின்மாற்றியின் விலை 8 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் என்று தெரிவித்துள்ள அன்புமணி, இவை அனைத்தையும் விட குறைவாக ஒரு மின்மாற்றி ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்து 311 ரூபாய்க்கு இராஜஸ்தான் அரசு வாங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments