மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்

0 1394

சென்னை எழும்பூரில்  மசாஜ் சென்டரில் ரெய்டுக்கு சென்ற போலீசாருக்கு பயந்து பெண் ஒருவர் ஜன்னல் வழியாக குதித்ததால் கை கால்கள் மற்றும் இடுப்பு எலும்பு முறிந்து பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரெய்டு தொடர்பான காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் தனியார் அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இயங்கி வந்த மசாஜ் பார்லர் ஒன்றிற்கு திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படை போலீசார் ரெய்டுக்கு சென்றனர்.

அந்த ஸ்பாவில் வேலைபார்த்து வந்த பெண்கள் திடீரென மாயமான நிலையில் வரவேற்பாளராக இருந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர்

சாதாரண உடையில் இருந்த பெண் காவலர்கள் அறைக்குள் சென்று ஆய்வு செய்த போது ஜன்னல் வழியாக இறங்கி சன்சேடு சிலாப் மீது 3 பெண்கள் பதுங்கி இருந்தனர்

அவர்களை பத்திரமாக போலீசார் மேலே ஏறி வரச்செய்தனர்

ஏற்கனவே ஒரு பெண் கீழே விழுந்த நிலையில் கிடப்பதை கண்ட பெண் காவலர் ஓடிச்சென்ரு பார்த்த போது அந்த பெண்ணுக்கு கை, கால்கள் மற்றும் இடுப்பு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடினார் . அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அயனாவரத்தை சேர்ந்த 33 வயதான அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்ந்துவருவதாகவும், அந்த பார்லரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக தான் பணியில் சேர்ந்தும் தெரியவந்தது. போலீசாரின் விசாரணையால், அவமானம் தாங்காமல் அந்தப்பெண் மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகின்றது. மீதம் உள்ள 4 பெண்களையும் காப்பகத்துக்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த மசாஜ் ஸ்பாவை நடத்தி வந்த அருள் ,மேனேஜர் மனோஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையால் அவமானம் தாங்காமல் பெண் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக முன் கூட்டியே அந்தப்பெண் குதித்ததற்கு ஆதாரமாக இந்த வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments