கனமழையால் முடங்கியது மும்பை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பையில் நேற்று 4 மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த மழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில்சேவை நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் ரயில்நிலையங்களில் காத்திருந்தனர்.
10 சென்டிமீட்டர் அளவுக்கு பெய்த மழை காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளித்தன. பேருந்துசேவைகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
14 விமானசேவைகள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய விமானசேவையிலும் பல மணி நேர தாமதம் ஏற்பட்டது.
மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வரை கன மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments