குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்

0 1376

அறுவை சிகிச்சை மருத்துவர்களின் கருத்தரங்கில் மது விருந்துடன் , பார் டான்சரின் நடனம் நடத்தப்பட்ட விவாகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த காட்சிகளை கண்டதும் ஏதோ பார், பப்களில் நடத்தப்பட்ட நடனம் என்று தவறாக எண்ணி விட வேண்டாம். சென்னையில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி தான் இது..

சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்தியாவின் பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டின் நிகழ்ச்சி ACRSICON 2024 என்ற பெயரில் கடந்த 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிவரை நடைபெற்றது.
இந்த மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியாக பார் டன்சர் போல உடையணிந்த பெண் ஒருவர் நடனமாட அங்கிருந்த மருத்துவர்களும் கையில் மதுக்கோப்பையுடன் நடனமாடினர்

அந்த பெண்ணுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சில மருத்துவர்கள் தங்கள் நடனத்திறமையை காட்டினர். இந்த நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி விமர்சனங்கள் எழுந்த நிலையில் , ஓட்டலில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments