முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச மறுவாழ்வு பயிற்சி மையம்... அதிநவீன சிகிச்சைகளுடன் சுயதொழில் செய்யவும் வழிவகை

0 619

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சாலை, காமராஜர் சிலை அருகே soul free என்ற பெயரில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு பயிற்சி மையத்தில் அதிநவீன வசதிகளுடன் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறன.

ப்ரீத்தி சீனிவாசன் என்ற பெண் கடந்த 1998ம் ஆண்டு தனது குடும்பத்தாருடன் புதுச்சேரி சென்று இருந்த நிலையில் அங்கு அவருக்கு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தினால் கழுத்திற்கு கீழ் எந்த ஒரு அசைவுகளும் இல்லாத நிலையே இவருக்கு இருந்து வந்தது.

இதனை தொடர்ந்து அமெரிக்காவின் சிகாகோ மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றார்.

இதனை தொடர்ந்து தன்னை போல் எந்த ஒரு பெண்ணும் பாதிக்க கூடாது என்ற எண்ணத்தில் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் சோல் ஃப்ரீ  மறுவாழ்வு மையத்தை அமைத்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மறுவாழ்வு பயிற்சிகளை கடந்த 11 ஆண்டுகளாக அளித்துவருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments