புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்ற காரில் கிடந்த 5 பேரின் சடலங்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்

0 1010

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சாலையோரம் நின்ற காருக்குள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஐவர் சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

நகர சிவமடம் என்ற இடத்தில் நேற்று மாலையில் இருந்து கார் ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள், சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள எஸ்.பி.ஐ காலனியைச் சேர்ந்த மணிகண்டன்குடும்பத்தினர் என்பதும்,  நாமக்கல் மற்றும் புதுக்கோட்டையில் எஸ். . எம். மெட்டல்ஸ் என்ற காப்பர் நிறுவனத்தை நடத்தி வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொள்வதாக அவர்கள் எழுதியதாக கூறப்படும் கடிதம் கிடைத்துள்ளதாக கூறியுள்ள போலீசார், மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என்றும் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments