உளுந்தூர்ப்பேட்டையில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு- 14 பேர் காயம்

0 911

உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் கிராமத்தில் இன்று அதிகாலை சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 14 பேர் படுகாயம் அடைந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்த 6 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments