ரேஸ் கிளப் நிலத்தில் புதிதாக நீர் நிலையை உருவாக்கலாம் - பசுமைத் தீர்ப்பாயம்
வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடரப்பட்ட மனு தொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வேளச்சேரி ஏரியின் மொத்த பரப்பளவு 266 ஏக்கர் எனவும், அதில் 140 ஏக்கர் இடத்தை தமிழ்நாடு நகற்புர வாழ்விட மேம்பாட்டு வாரியமும், 53 ஏக்கர் இடத்தை வீட்டு வசதி வாரியமும், 18 ஏக்கர் இடம் பிற ஆக்கிரமிப்புகள் போக வெறும் 55 ஏக்கர் இடத்தில் மட்டுமே தற்போது வேளச்சேரி ஏரி இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இயல்பான கொள்ளளவு 21 மில்லியன் கன அடியாக இருந்து தற்போது வெறும் 4.3 மில்லியன் கன அடியாக சுருங்கி விட்டதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. வேளச்சேரி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும் ஆக்கிரமிப்புக்களுக்கு மாற்று இடமாக கிண்டி ரேஸ் கிளப்பில் இடம் வழங்கலாம் என்றும், இல்லையேல் கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிதாக நீர் நிலையை உருவாக்கலாம் என்றும் தீர்ப்பாய உறுப்பினர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
Comments