தமிழகத்தில் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் செயல்படவில்லை என புகார்.. ஊடகங்களில் செய்திகள் வெளியானாலாவது தீர்வு கிடைக்குமா?-நீதிபதிகள்

0 438

 தமிழகத்தில் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் செயல்படாமல் இருப்பதை, மத்திய நிதித்துறை அமைச்சர் கவனத்தில் எடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடனை செலுத்தாத, வாகனம், சொத்துக்கள் போன்றவற்றை ஏலம் விட வங்கிகள் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை, கோவை, மதுரையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்கள் முறையாக செயல்படாததால்,  கேரளாவில் உள்ள மையங்களுக்குச் செல்லுமாறு கூறுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறிய நீதிபதிகள் , இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானாலாவது கடன் வசூல் தீர்ப்பாய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுமா? என்பதை பார்க்கலாம் என்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments