லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை... ஒரே நாளில் 35 குழந்தைகள் உள்பட 492 பேர் பலி
லெபனானில், ஹிஸ்புல்லா போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 492 பேர் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்பொல்லா போராளிகள் ஓராண்டாக தாக்குதல் தொடுத்துவருகின்றனர். ராக்கெட் ஏவுதளங்கள், ஆயுத கிடங்குகள் என ஒரே நாளில் ஆயிரத்து 100 ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 35 குழந்தைகள் உள்பட 492 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு அஞ்சி, லெபனானின் தென் பகுதிகளிலிருந்து வட பகுதிகளை நோக்கி ஏராளமானோர் இடம் பெயர தொடங்கியுள்ளனர்.
Comments