திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
நீர்நிலையை ஆக்கிரமித்து அரசு கட்டடம் கட்டி நிதியை வீணடித்த ஊராட்சி ஒன்றிய பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்த தொகையை அவர்களிடமிருந்து திரும்ப பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ஜாக்காபுரத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக சமுதாயக் கூடம் கட்டப்பட்டதால், ஓடையில் மழைநீர் செல்ல முடியாத நிலை உள்ளதாகக்கூறி அதனை அகற்ற உத்தரவிடக் கோரி அருமைதாஸ் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
3மனுவை விசாரித்த நீதிபதிகள், 12 வாரத்திற்குள் சமுதாய கூடத்தை இடித்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், நீர் நிலைகளை ஆக்கிரமித்து, அந்த இடங்களில் அரசு கட்டடங்களை கட்டுவதற்கு தேர்வு செய்யக் கூடாது என அனைத்து அரசு உயர் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
Comments