தரக்குறைவாகப் பேசியதால் தாக்குதல்.. பெட்டிக்கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது
சீர்காழி அருகே பெட்டிக் கடைக்காரர் முகமது ரபீக்கை வெட்டிக் கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தங்களை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட முகமது பாசித், சுபாஷ், முகமது யூசுப் ஆகியோர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் கைது செய்யும் பொழுது முக்கியக் குற்றவாளியான முகமது பாசித் கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments