பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
டெல்டா விவசாயிகள் காவிரி நீரை நம்பியே இல்லாமல் அரசின் துணையுடன் பண்ணைக் குட்டைகள் அமைத்து விவசாயம் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார்.
காவிரி நீரை நம்பிக் கொண்டே இருந்தால் இனி குறுவை சாகுபடி நடக்காது என எண்ணி வேதாரண்யத்தை அடுத்துள்ள வாட்டாகுடி கிராமத்தில் உள்ள தமது ஒருங்கிணைந்த பண்ணையில் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குட்டைகள் வெட்டி நீரை சேமித்து வந்ததாகவும், அந்த நீரை மட்டுமே நம்பி 20 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அறுவடைக்கு தயாராக உள்ள தமது பயிர்கள் மூலம் ஆயிரம் மூட்டை நெல் கிடைக்கும் என்றும் நீருக்காக தேக்கும் குளத்தில் மீன்களை வளர்ப்பதாகவும், பண்ணையில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழியின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்துவதாகவும் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
Comments