அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
அமேசான் காடுகளில் அடிக்கடி காட்டுத்தீ பரவும் நிலையில், அதற்கு காரணமான சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரேசில் வேளாண்மைத் துறை அமைச்சகம் முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதிகள் பிரேசிலில் உள்ள நிலையில், அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத்தீ பரவுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது..
காட்டுத்தீயை அணைக்கும் பணியில், 22 விமானங்களுடன் 4,000 வீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் காட்டுத்தீ பரவ சமூக விரோதிகள் காரணமாக இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments