தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
வேலூர் அடுத்த ஊசூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தம்பியை முட்டிபோட வைப்பதாக மிரட்டிய மாணவனை, அதே பள்ளியில் படிக்கும் அண்ணன், பிளேடால் கிழித்து ஓட விட்ட சம்பவம் அறங்கேறி உள்ளது.
வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஆங்கில வழியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவரை, அதே பள்ளியில் தமிழ் வழியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் தாக்கி , பிளேடால் தலை மற்றும் உடலில் கிழித்து காயப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
பலத்த காயம் அடைந்த மாணவர் சிகிச்சைக்காக ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலை, முதுகு, மார்பு பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டது. சம்பவம் தொடர்பாக அரியூர் போலீசார் மாணவரிடம் விசாரித்தனர். தனக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகஉம், அவனுக்கு ஆதரவாக 12 ஆம் வகுப்பு படிக்கும் அவனது அண்ணன் தன்னிடம் வம்பிழுத்து , “என் தம்பிய முட்டிபோட வைப்பியா” ? என்று கேட்டு பிளேடால் கிழித்ததாக தெரிவித்தான்.
ஏற்கனவே இவர்களுக்குள் பள்ளியில் அடிக்கடி தகராறு நடந்து வந்ததன் தொடர்ச்சியாகவே, இச் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மதிய உணவு இடைவேளையில் நடந்ததால் ஆசிரியர்களால் இதை தடுக்க இயலவில்லை என்று பள்ளி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதே போல மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவரிடம் பேசுவது யார் ? என்ற போட்டியில் நர்சிங் கல்லூரி மாணவியை, பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் பாய்ந்து சென்று தாக்கினார்
இருவரும் தலைமுடியை பிடித்துக் கொண்டு அலறிய நிலையில் , அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கி கொண்டு சென்றனர். இதனை கண்ட கல்லூரி மாணவர்கள் விசில் அடித்து உற்சாகப்படுத்தினர்.
Comments