குறுஞ்செய்தியில் வரும் லிங்க்.. உஷார் ... வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருட்டு

0 1153

சென்னை அருகே உள்ள சோமங்கலத்தில் குறுந்தகவல் மூலம் வந்த இணைப்பை கிளிக் செய்ததால், தமது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 49 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதாக பாபு என்ற நபர் புகார் அளித்துள்ளார்.

எஸ்.பி.ஐ. வங்கியின் யோனோ ஆப் மூலம் ரிவார்ட் கிடைத்துள்ளதாகக் கூறி 9480741803 என்ற எண்ணில் இருந்து தமது மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்ததாகவும், அதில் இருந்த இணைப்பை தொட்டதும் யோனோ ஆப்பிற்குள் சென்று சில நிமிடங்களில் பணம் எடுக்கப்பட்டதாகவும் பாபு தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி.ஐ அதிகாரிகள், சமீப நாட்களாக இது போன்று புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY