கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
வேலூர் மாநகராட்சியில் கால்வாய் பணி, மின் வாரிய பணிகளுக்காக சாலையை கொத்தி கொத்தி வைத்துள்ளதால் நடப்பவன் அதில் விழுந்து தத்தி தத்தி போனான் என்கிற நிலை இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளர்.
வேலூர் மாவட்டம்,காட்பாடி காங்கேயநல்லூரில் ரூ.1.4 கோடி மதிப்பீட்டில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் சார்பில் 24 கடைகள் புதியதாக கட்டப்பட்டு அதன் திறப்பு விழாவானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கடைகளை திறந்து வைத்தார். இவ்விழாவில் பயனாளிகளுக்கு கடனுதவிகளை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். விழாவில் பேசிய அவர், தனது தொகுதியில் வீதி சாலைகள் பளிங்கு போல் இருக்க முயற்சிகள் செய்ய வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் எனக்கூறினார். 50 ஆண்டுகால அனுபவம் பெற்ற தன்னிடம் சாலைகள் இப்படி இருக்கிறது என எவனாவது கேட்டால் அசிங்கம் எனத்தெரிவித்தார்.
வேலூர் காந்தி நகரில் இரண்டு கழிவு நீர் கால்வாய்களையும் செப்பனிட நடவடிக்கைகளை செய்துள்ளதாக தெரிவித்த அவர் இனி மேல் எங்கும் சாக்கடை ஓடும் நிலை இருக்காது என்றார்.
மாநகராட்சி பணிகளில் சில நேரங்களில் அதிகாரிகளும், கட்சியினரும் அவசரப்பட்டு செய்வதாகவும் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
அமைச்சர் தனது தொகுதி மக்களின் மனநிலையை அப்படியே படம்பிடித்து காட்டிய படி பேசியதாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
Comments