மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

0 585

தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை அலுவலகத்தில் 60 லட்சம் ரூபாயை பெண் ஒப்பந்த ஊழியர் கையாடல் செய்த புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுக்கு குவாரி உரிமையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில், 5 விழுக்காடு, இந்த அலுவலகத்தில் செயல்படும் ‘மினரல் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் பிரிவில் வரவு வைக்கப்பட்டு, குவாரி அமைந்துள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நிலையில், இங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தமிழ்ச்செல்வி என்ற பெண், இ -செலானில் திருத்தம் செய்து, 20 குவாரி உரிமையாளர்களிடம், 60 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து விட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments