ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச முட்டையை சட்ட விரோதமாக ஓட்டலுக்கு ஆம்லேட் போட விற்பனை செய்த சத்துணவு அமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். 2 ரூபாய்க்கு முட்டையை வாங்கி ஆம்ப்லேட் போட்டு 15 ரூபாய்க்கு விற்ற ஓட்டல் உரிமையாளர் அகப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
துறையூர் ஓட்டல் ஒன்றில் பள்ளிமாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் முத்திரையிடப்பட்ட சத்துணவு முட்டைகளால் ஆம்லெட்,
ஆப் ஆயில் தயாரிக்கப்பட்டு 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ரத்னா ஓட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கிருந்து அரசில் இலவச முட்டைகளை பறிமுதல் செய்தனர். ஓட்டலின் உரிமையாளர் ரத்தனத்திடம் நடத்திய விசாரணையில், மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நுட்டைகளை தலா 2 ரூபாய் வீதம் சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரியிடம் இருந்து விலைக்கு வாங்கியதாகவும், அதனை ஆம்லேட், ஆப்பாயில் , கலக்கி என வித விதமான சைடிஸாக மாற்றி 15 ரூபாய்க்கு விற்றதாகவும் தெரிவித்தார்.
அரசின் முட்டைகளை விலைக்கு வாங்கிய ரத்னத்தையும் , முட்டைகளை விற்ற பள்ளியி ந்சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரியையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அந்த ஓட்டலையும் பூட்டி சீல் வைத்தனர்
Comments