"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 742

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இத் திட்டத்தை பாஜக அரசால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வேறுபட்ட தேர்தல் நடைமுறைச் சிக்கல்களை பாஜக அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்றும், இந்த ஒட்டுமொத்த முடிவுமே பாஜகவின் ஈகோவைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப நாட்டின் ஜனநாயகத்தை வளைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments