சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்

0 1477

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 60 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தவில்லை எனக் கூறி சென்னை நங்கநல்லூரில் உள்ள வெற்றி சினிமாசின், 2 தியேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்தே வரி தொகையை பாக்கி வைத்துள்ளதாக நோட்டீஸ் வழங்கியும் பலமுறை நேரில் சென்று கூறியும் இதுவரை வரி செலுத்தவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரையரங்க உரிமையாளர்கள், பணியாளர்களை வெளியேற்றி விட்டு வெற்றி மற்றும் வேலன் தியேட்டருக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments