கேரளாவில் நிஃபா வைரஸ் பாதித்து ஒருவர் உயிரிழந்த நிலையில்... கேரள - தமிழக எல்லைகளில் தீவிர சோதனை
நிஃபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் இளைஞர் உயிரிழந்த நிலையில் கோயம்புத்தூரில் தமிழக கேரள எல்லைப்பகுதிகளில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.
13 சோதனைச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வருவோர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும் செய்து வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முந்தல் சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி ஆகியவை நிஃபா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள் என்பதால் அதுகுறித்தும் கேட்டறியப்படுகிறது.
Comments