பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார்

0 665

நடிகை சிஐடி சகுந்தலா பெங்களூரில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.

சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.

1970-ல் வெளியான சிஐடி சங்கர் படத்தில் நடித்ததையடுத்து அவர் சிஐடி சகுந்தலா என்று அழைக்கப்பட்டார்.

‘படிக்காத மேதை’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’, ‘தவப்புதல்வன்’, ‘வசந்த மாளிகை’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘பொன்னூஞ்சல்’, ‘என் அண்ணன்’, ‘இதயவீணை’ என 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த அவர், பின்னர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார்.  வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. சிஐடி சகுந்தலாவின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments