லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்கு - கொல்கத்தாவுக்கு மாற்றியது சரியே என நீதிபதி உத்தரவு..!
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவுக்கு மாற்றியது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை வருமான வரித்துறைதான்வழக்கை விசாரிக்க வேண்டும் என மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன்ராமசாமி, தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார்.
மேற்கு வங்கம், நாகலாந்து, சிக்கம், பூட்டான் மாநிலங்களில் மார்ட்டினின் நிறுவனம் லாட்டரி விற்பனை செய்து வருவதால் வழக்கு மாற்றப்பட்டது சரி எனக்கூறி லீமா ரோஸின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Comments