மயிலாடுதுறையில் மணமேடையில் மணமகளிடம் ஒப்பந்தம் போட்ட மணமகனின் நண்பர்கள்

0 846

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமணம் முடிந்தவுடன் நண்பனை தங்களுடன் நேரம் செலவிட அனுமதிக்குமாறு மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் மணமகனின் நண்பர்கள்  கையெழுத்து வாங்கினர்.

தென்பாதியைச் சேர்ந்த முத்துகுமார் - பவித்ரா ஜோடிக்கு, தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது முத்துகுமாரின் நண்பர்கள் ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வந்தனர்.

அதில் திருமணத்திற்கு பிறகு எப்போதும் போல நண்பர்களுடன் சேர்ந்து, முத்துகுமார் வெளியூர் சுற்றுலா செல்வதற்கும், நண்பர்களுடன் என்ஜாய் பண்ணுவதற்கும் தடையாக இருக்க மாட்டேன் என மணப்பெண் பவித்ராவிடம் கையெழுத்து வாங்கினர்.

மைனா படத்தில் வரும் காட்சிகளைப் போல வெளியில் செல்லும் கணவனை நிம்மதியாக இருக்க விடாமல் எப்ப வருவீங்க, எப்ப வருவீங்க என டார்ச்சர் செய்யக் கூடாது என்பதற்காக  இவ்வாறு கையெழுத்து வாங்கியதாக மணமகன் நண்பர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments