மியான்மரை தாக்கிய 'யாகி' சூறாவளி.. வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 74 பேர் பலி..
வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்தை தொடர்ந்து மியான்மரை தாக்கிய யாகி சூறாவளியால் அங்கு 74 பேர் உயிரிழந்தனர்.
4 நாடுகளில், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நடப்பாண்டில் ஆசிய கண்டத்தை தாக்கிய சக்திவாய்ந்த புயலாக யாகி சூறாவளி கருதப்படுகிறது.
2021 முதல் நடந்துவரும் ராணுவ ஆட்சியால் மியான்மார் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், சூறாவாளி தாக்கியதால் இயல்பு வாழ்க்கை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Comments