ஏரிகளில் கழிவு நீரை கொட்டும் ரசாயன ஆலைகள் திருவள்ளூர் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0 355

கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் இயங்கும் சில ரசாயன ஆலைகள் ஏரிகளில் கழிவு நீரை கொட்டுவதால் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் அதன் இரசாயன கழிவுகள் மற்றும் தொழிலாளர் குடியிருப்பில் இருந்து வெளியேறக்கூடிய மனித மலக்கழிவுகள் உள்ளிட்டவை டேங்கர் லாரிகள் மூலம் மழை நீர் வடிகால்வாய்களில் கொட்டப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமரை ஏரி மற்றம் சிந்தலகுப்பம் ஏரி ஆகியவற்றிலும் கழிவு நீர் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணமாக விளங்கக்கூடிய தொழிற்சாலைகள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments