பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு புதிய தங்கத்தேரின் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்..
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
11 கிலோ தங்கம், 27 கிலோ வெள்ளி மற்றும் 379 கிலோ செம்பு ஆகியவற்றை உருக்கி சுமார் 8 கோடியே 54 லட்சம் செலவில் தங்கத் தேர் செய்யப்பட்டுள்ளது.
11 புள்ளி 5 அடி உயரத்தில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டு பிரம்மன் தேரோட்டியாக உள்ளது போல் தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளோட்ட நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, மானிய கோரிக்கையில் அறிவித்தபடி ஒரு தேரின் வெள்ளோட்டம் நடத்தப்பட்டதாகவும், மீதமுள்ள 4 தங்கத் தேர்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.
Comments