ஈரோட்டில் கரும்பலகையில் பாடக்குறிப்புகளை விரைவில் அழித்த விவகாரம்... மாணவனை அடித்த தலைமை ஆசிரியர் மீது புகார்

0 763

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், கரும்பலகையில் எழுதிய பாடக்குறிப்புகளை ஆசிரியை விரைவில் அழித்தது குறித்து கேட்ட 12ம் வகுப்பு மாணவனை, தலைமை ஆசிரியர் ஐந்து முறை கன்னத்தில் அடித்ததாக சென்னிமலை போலீசில் மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

வணிகவியல் பிரிவு வகுப்பாசிரியை கோகிலவாணி, தலைமை ஆசிரியர் ஆறுமுகத்தின் உறவினர் எனக் கூறப்படும் நிலையில், அவரைப்பற்றி  சில மாணவர்கள் ஆறுமுகத்திடம் முறையிட்டதாகவும், அப்போது ஆறுமுகம் அடித்ததில், சண்முகவேலு வாந்தி மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments