ராமநாதபுரத்தில் நூறு ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த ஓட்டுநர் கைது

0 588

ராமநாதபுரம் மாவட்டம் காமன்கோட்டையில் நூறு ரூபாய் தாளை கலர்ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்ததாக ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுக் கொண்டிருந்த கார்த்திக்கிடம் சோதனை நடத்தி ஒரு ஏ4 சைஸ் வெள்ளைத் தாளில் 4 கலர் ஜெராக்ஸ் வீதம் 78 தாள்களை கைப்பற்றினர். நாமக்கல்லில் இருந்து  இந்த நோட்டுகளை கார்த்திக் வாங்கி வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments