உடலில் கட்டி இருக்குதா..? புற்றுநோய் பரிசோதனை இது உங்களை காப்பாற்றும்..! மருத்துவர் சொல்லும் ரகசியம் என்ன ?

0 1166

புற்றுநோயைக் குணப்படுத்த, கதிர்வீச்சு அபாயத்தைப் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், உடலில் நாள்பட்ட கட்டிகள் மற்றும் மருக்களில் மாற்றம் ஏற்பட்டால் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்

புகையிலைப்பழக்கம், தவறான உணவுபழக்கம் உள்ளிட்டவற்றால் மக்களிடையே நாளுக்கு நாள் புற்று நோய் அதிகரித்து வருகின்றது. ஆரம்பத்திலேயே புற்று நோய் குறித்து தெரிந்து கொள்ளும் விழிப்புணர்வு இல்லாததால் ஒரு கட்டத்தில் அந்த நோய் உயிர்க்கொல்லியாக மாறி பல உயிர்களை பலி வாங்குவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உடலில் ஆறாத புண், தீராத இருமல், நாள்பட்ட கட்டிகள், கர்ப்பவாயில் இரத்தக் கசிவு, மலம் கழிக்கும் போது இரத்தக் கசிவு, மருக்களில் மாற்றம், தோலில் தீராத புண், உணவு விழுங்குவதில் சிரமம் போன்ற 8 அறிகுறிகள் உடலில் தென்பட்டால் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தும் மருத்துவர்கள், ஆரம்பகால கட்டதிலேயே அதற்கு துல்லியமாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் 80 சதவீதம் குணமாக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது போன்ற அறிகுறிகள் உடலில் இருப்பது தெரிய வந்தாலும், சாதாரணமாக எடுத்து கொண்டு, நோய் முற்றிய நிலையில் வருவதால், பல உயிர்களை காப்பாற்ற இயலாத நிலை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை சிதைக்க கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் நெஞ்சில் சுமந்திருக்கும் PERSONAL DOSI METER எனும் கதிர்வீச்சு அளவை கணக்கீடு செய்யும் கருவியால், வருடத்துக்கு 20 மில்லி SIEVERT கதிர்வீச்சை எதிர்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

புற்றுநோயில் இருந்து நோயாளிகளை பாதுகாக்க கதிர்வீச்சுக் கருவிகளுடன் சேவையாற்றும் மருத்துவர்கள் ஒவ்வொருவரும் மனதிடம் மிக்க மனித நேயர்களே..!



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments