காங்கிரஸ்ல இதெல்லாம் சகஜமப்பா.. செங்கோல் கொடுக்க எதிர்ப்பு.. விரட்டப்பட்ட பெண் நிர்வாகி ..! சமூக நீதி தள்ளிவிடப்பட்ட தருணம்

0 1220

சென்னை தண்டையார் பேட்டையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மாநில தலைவருக்கு வெள்ளி செங்கோலை நினைவுப்பரிசாக வழங்க வந்த பெண் நிர்வாகியை மேடையில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தி மாவட்ட தலைவர் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரிடம் அனுமதி பெறாமல் மாநில தலைவருக்கு எப்படி நினைவு பரிசு கொண்டுவரலாம் என்று மேடையில் ஏறவிடாமல் தடுத்து பெண் நிர்வாகியை விரட்டிய காட்சிகள் தான் இவை..!

காங்கிரஸ் கட்சியின் வடசன்னை மாவட்ட ஆலோசனை கூட்டத்துக்கான ஏற்பாடுக்ளை மாவட்டதலைவர் எம்.எஸ். திரவியம் செய்திருந்தார்.

அப்போது மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ள மதாரம்மா கனி என்ற பெண் கை சின்னத்துடன் கூடிய வெள்ளி செங்கோல் ஒன்றை கொண்டு வந்து , தலைவர் செல்வ பெருந்தகைக்கு கொடுப்பதற்காக மேடையில் ஏற முயன்றார்

இதனை பார்த்து ஆவேசமான எம்.எஸ். திரவியம் , “மாவட்ட தலைவரான தன்னிடம் முறைப்படி அனுமதி கேட்காமல் , எப்படி நினைவு பரிசு வழங்கலாம்” என்று கேட்டு அவரை மேடை ஏற விடாமல் ஆதரவாளர்களை ஏவி தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மதாரம்மா கனியின் ஆதரவாளர் கையை ஓங்கியதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, நினைவு பரிசுடன் அவர் கீழே தள்ளிச்செல்லப்பட்டார்

நிலைமையை உணர்ந்த மூத்த நிர்வாகிகள், அந்த பெண் நிர்வாகியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர், தலைவர் செல்வ பெருந்தகை பேசுவதற்கு முன்பாக அவரை மேடையில் ஏற்றி அந்த செங்கோலையும், பாதயாத்திரைக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியையும் அள்ளிக்கொடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments