சம்பா சாகுபடி - கீழணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறப்பு..

0 438

சம்பா சாகுபடிக்காக, தஞ்சை மாவட்டம் கீழணை மற்றும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தண்ணீரைத் திறந்து வைத்தார்.

கீழணையில் இருந்து வடவாறு, ராஜன் வாய்க்கால், மண்ணியாறு உள்ளிட்ட வாய்க்கால்களில் விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், கடலூர், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் நிலமும், வீராணம் ஏரியில் இருந்து திறக்கப்பட்டுள்ள 100 கனஅடி நீர் மூலம், 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலமும் பாசன வசதி பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments