முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்து..!
அமெரிக்காவின் சிகாகோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே செயல்பட்டுவரும் தங்களது ஆலைகளை கேட்டர்பில்லர் நிறுவனம் விரிவுபடுத்த இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. கட்டுமானம், சுரங்க கருவி, இயற்கை எரிவாயு இயந்திரம், டீசல் எலெக்ட்ரிக் என்ஜின்களை கேட்டர்பில்லர் நிறுவனம் உற்பத்தி செய்வதில் முன்னிலை வகித்துவருவதாகவும், டிராக்டர், வீல் லோடர்கள், மோட்டார் கிரேடர்கள், என்ஜின் உள்ளிட்டவற்றையும் அந்நிறுவனம் தயாரிப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 16 முன்னணி நிறுவனங்களுடன் 7 ஆயிரத்து 16 கோடி ரூபாய் முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Comments