திருநெல்வேலி தலைமை சர்வேயர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு
திருநெல்வேலி தலைமை சர்வேயர் மாரியப்பன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீட்டில் நடந்த சோதனையின் போது அவரது டெபிட் கார்டு மூலம் ஜுவல்லரியில் லட்சக்கணக்கில் நகை வாங்கியதால் சிக்கியுள்ளார்.
இதற்கு முன்பு தூத்துக்குடியில் நிலம் ஆவணம் மற்றும் சர்வே இயக்குனராக பணியாற்றிய போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது .
நெல்லையில் பிரபல நகைக்கடையில் நகைகள் வாங்கியதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாயை கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது
Comments