அர்ஜெண்டினா நாடாளுமன்றத்தில் ஓய்வூதியத்தை உயர்த்தும் சட்ட மசோதா தோல்வி... ஓய்வூதியதாரர்கள் போலீசாருக்கும் இடையே மோதல்
அர்ஜெண்டினா நாடாளுமன்றத்தில், ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா நிறைவேற்றப்படாததை கண்டித்து ஓய்வூதியதாரர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஒருபுறம் விலைவாசி உயர்வால் மக்கள் தவிக்க, மறுபுறம் நிதி பற்றாக்குறையால் அர்ஜென்டினா அரசு தள்ளாடிவருகிறது.
ஓய்வூதியத்தை 8 சதவீதம் உயர்த்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பால், வாக்கெடுப்பில் மசோதா தோல்வியடைந்தது. இதைக் கேள்விப்பட்டு, நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஓய்வூதியதாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
Comments