இரட்டை கோபுர தாக்குதலின் 23-ஆம் ஆண்டு நினைவு தினம்... ஜோ பைடன், கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் பங்கேற்பு

0 692

அமெரிக்காவை உலுக்கிய இரட்டை கோபுரத் தாக்குதலின் 23-ஆம் ஆண்டு நினைவேந்தல் நியூயார்க்கில் அனுசரிக்கப்பட்டது. 2001, செப்டம்பர் 11-ஆம் தேதி, 4 பயணிகள் விமானங்களை கடத்திய அல் கொய்தா பயங்கரவாதிகள், அவற்றை இரட்டை கோபுரங்கள் மற்றும் பெண்டகன் மீது மோதினர்.

உயிரிழந்த மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடந்த நிகழ்ச்சியில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முந்தைய தினம், காரசார தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட கமலா ஹாரிஸும், டிரம்பும் கை குலுக்கிக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments