70 வயதான எல்லோருக்கும் ஆயுஷ்மான் காப்பீடு... பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சமூகப் பொருளாதார நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் சுகாதார காப்பீடு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
'ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' திட்டத்தின் கீழ் 6 கோடிக்கு மேல் மூத்த குடிமக்களைக் கொண்டுள்ள நான்கரை கோடி குடும்பங்கள் ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீட்டை பெற முடியும்.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் வேறு காப்பீடு திட்டங்களில் இணைந்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் புதிய காப்பீடு திட்டத்தைத் தேர்வு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments