சாலையில் பறந்த கற்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் அடாவடி தவித்து நின்ற வாகன ஓட்டிகள்..!

0 1175

கோவை சுந்தராபுரத்தில் இரு ஆட்டோ ஓட்டுனர்கள் சாலையில் எதிரெதிரே நின்று கல் எறிந்து சண்டை போட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்

கோவை சுந்தராபுரம், காமராஜர் நகர் பஸ் நிலையம் அருகே சம்பவத்தன்று மாலை, ஆட்டோ ஓட்டுனர்கள் 2 பேர் கற்களை எடுத்து வீசி நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட காட்சிகள் தான் இவை..!

தான் அணிந்திருந்த காவி வேட்டியை அவிழ்த்துப் போட்டு விட்டு, கையில் கத்தியை எடுத்து வந்து நடுரோட்டில் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரை விரட்டினார்

இருவரும் சாலையில் நின்று கையில் கற்களை எடுத்து மாறி மாறி மிரட்டினர். சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மீதும், வாகனங்கள் மீதும் கற்கள் பட்டதால், சாலையில் இருபுறமும் வாகனங்கள் அப்படியே நின்றன.

இருவரையும் தட்டிக்கேட்கவோ, தடுக்கவோ ஒருவர்கூட முயற்சிக்காத நிலையில், போலீசார் வரவும் தாமதமானதால் இருவரும் கையில் கத்தியை வைத்துக் கொண்டு கற்களை வீசிக் கொண்டே இருந்தனர்.

ஒருகட்டத்தில், கல்வீச்சில் காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு ஒன்வேயில் புகுந்து தப்பினார்.

இறுதியில் வந்த சுந்தராபுரம் போலீசார் இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். ஆட்டோ டிரைவர்களான உதயசூரியன், கதிர் ஆகியோருக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதாகவும், குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதும் தெரியவந்தது. காயம் அடைந்த இருவர் சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments