திருவள்ளூரில் இரவு பணிக்கு வந்த மருத்துவர் மது போதையில் இருந்ததாக புகார்

0 713

திருவள்ளூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் இரவு பணியாற்றிய மருத்துவர் நல்லதம்பி குடிபோதையில் இருந்தாகக்கூறி, அவரை சூழ்ந்த நோயாளிகளின் உறவினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் போது அவசர பிரிவுக்குள் வந்த நோயாளிகளின் உறவினர்களை மருத்துவர் நல்லதம்பி ஒருமையில் பேசி அவர்களை வெளியே போகுமாறு திட்டியதாக கூறப்படுகிறது.

போதையில் இருந்த தன்னை நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகையிட்டதை அடுத்து, வார்டிலிருந்து வெளியேறிய மருத்துவர் வரண்டாவில் படுத்து உறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வெளியான நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளதாக திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments