கிருஷ்ணகிரியில் சாலை அமைக்கும் பணி... தி.மு.க - அ.தி.மு.க வாக்குவாதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி கேட் பகுதியில், சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்ய தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ, கே.பி முனுசாமி சாலையில் அமர்ந்து தொண்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாய் மதிப்பில் தனது சொந்த தொகுதியில் கே.பி.முனுசாமி சாலைப் பணியை தொடங்க முற்பட்டபோது, தி.மு.க ஆட்சியில் தாங்கள்தான்பணிக்கு அடிக்கல் நாட்டுவோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ கே.பி முனுசாமி தொண்டர்களுடன் வேப்பனஹள்ளி - பேரிகை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
Comments