வெனிசுலா அதிபர் தேர்தலில் முறைகேடு... பிரேசிலுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
வெனிசுலா அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி ஒருபுறம் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், மறுபுறம் பல்லாயிரக்கணக்கானோர் அண்டை நாடான பிரேசிலுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
கைது நடவடிக்கைக்கு அஞ்சி அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சி தலைவரான கொன்சாலஸும் ஸ்பெயினில் தஞ்சமடைந்ததால், உலக நாடுகள் தங்களை கைவிட்டுவிட்டதாக வெனிசுலா மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து கடந்த 3 மாதங்களில் பிரேசிலுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துவருகிறது. பிரேசிலின் எல்லையோர நகரமான பராகைமாவில் உள்ள ஐ.நா. முகாமில் அவர்கள் நாள் கணக்கில் காத்துகிடக்கின்றனர்.
Comments