ரஷ்யாவுக்கு, ஈரான் ஏவுகணைகளை வழங்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
ரஷ்யாவுக்கு ஈரான் ஏவுகணைகளை வழங்கி உள்ளதாகவும், அவற்றை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்தக்கூடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அவ்வாறு நடந்தால் ஈரான் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கப்போவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தடையை மீறி ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதால், ஈரானுக்கான விமான சேவைகளை நிறுத்தப்போவதாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
கடந்த மாதம், ரஷ்யாவுக்குள் உக்ரைன் படைகள் ஊடுருவியதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ளது.
Comments