அரசு பேருந்து நடத்துனரை விரட்டி விரட்டி தாக்கிய சட்டக்கல்லூரி மாணவி..! கிளைமாக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்

0 1974

குரோம்பேட்டையில் தங்களது காரை இடித்து சேதப்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், தனது கணவருடன் சேர்ந்து பேருந்தின் நடத்துனரை விரட்டி விரட்டி தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

தங்களது காரை இடித்து சேதப்படுத்தியதோடு, அடாவடியாக பேசிய அரசு பேருந்து நடத்துனரை விரட்டி விரட்டி தாக்கிய காட்சிகள் தான் இவை..!

சென்னை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தை ஓட்டுனர் இருச்சப்பன் இயக்கிச் சென்றார். குரோம்பேட்டை அருகே சாலையோரம் அதிமுக கொடி கட்டப்பட்ட மகிந்திரா தார் வாகனத்தின் மீது இடித்து உரசிவிட்டு சென்றது. காருக்குள் இருந்து இறங்கிய சட்டக்கல்லூரி மாணவி அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார்.

இதனால் காரில் இருந்தவர்கள் ஆத்திரமடைந்து அரசு பேருந்தை மறித்து பேருந்திற்குள் இருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாததில் ஈடுபட்டனர். அபோது வாக்குவாதம் முற்றியதால் , சத்தம் கேட்டு கடைக்குள் இருந்து வந்த சட்டக்கல்லூரி மாணவி அவரது கணவருடன் சேர்ந்து நடத்துனர் அசோக்குமாரின் வாயை உடைத்து அடித்து ஓடவிட்டார்

ஓட்டுனரும் நடத்துனரும் அடி வாங்கிக் கொண்டே சம்பவத்தை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்

பேருந்தில் இருந்த பயணிகள அலறி அடித்து கொண்டு இறங்கி அடிகொடுத்தவர்களை சமாதப்படுத்தினர்

பாதிக்கபட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அவ்வழியாக வந்த அரசு பேருந்துகளை நிறுத்தினர். தங்களை தாக்கிவிட்டு தப்பி சென்ற வழக்கறிஞர்கள் மீது உடனடி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேருந்தை சாலையில் நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் பயணிகள் அவதியடைந்ததுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனால் ஜி.எஸ்.டி.சாலையில் இரண்டு மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, அதற்குள்ளாக சட்டக்கல்லூரிமாணவி உள்ளிட்டோர் தங்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பினர்

பாதிக்கபட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் தாங்கள் செய்த தவறை மறைத்து தாக்கியதை மட்டும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய புகாருக்குள்ளான சட்டகல்லூரி மாணவி, தனியார் சட்டக்கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயிலும் ஷாலினி என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், தாக்குதல் நடத்திய பெண் வழக்கறிஞர் ஷாலினி, அவரது கணவர் ரஞ்சித் மற்றும் நண்பர்கள் அஸ்வந்த், தீலீப் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து, குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments