பெண் மருத்துவர் கொலையில் உச்ச நீதிமன்ற விசாரணையில் எங்களுக்குத் திருப்தி இல்லை - ஜூனியர் மருத்துவர்கள்
மேற்கு வங்கத்தில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என ஜூனியர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற விசாரணையில் தங்களுக்குத் திருப்தி இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கும், சி.பி.ஐ.க்கும் மாற்றப்பட்டும் இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும், இது மக்கள் போராட்டமாக மாறிவிட்டதை உச்ச நீதிமன்றமும், மாநில அரசும் மறந்துவிடக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Comments