ஒரே இடத்தில் அதிக அளவு சோலார் செல் உற்பத்தி இடமாக மாறிய நெல்லை - மாவட்ட ஆட்சியர்
சுமார் 4,300 கோடி முதலீட்டில் டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள பெரிய அளவிலான சோலார் செல் உற்பத்தி ஆலையால் திருநெல்வேலி மாவட்டம் கவனிக்கத்தக்க இடத்திற்கு முன்னேறி வருவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
புத்தாக்க தொழில் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், ஆசியாவிலேயே ஒரே இடத்தில் அதிக அளவில் சோலார் செல் உற்பத்தி செய்யும் இடமாக திருநெல்வேலி மாறி உள்ளதாக கூறினார்.
இந்த ஆலையில் 80 சதவிகிதம் பெண்கள் வேலை செய்வது சிறப்பு வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.
Comments