கிராம நிர்வாக பெண் அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.40 லட்சம் மதிப்பிலான 51 சவரன் நகை கொள்ளை

0 817

சென்னை தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் வசித்து வரும் வளையக்கரணை கிராம நிர்வாக அலுவலர் ஹேமாவதி வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 51 சவரன் நகை,மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

உறவினர் வீட்டுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அருகில் வீடுகள் இன்றி தனியாக உள்ள இவர்களின் வீட்டில் கொள்ளையடித்துள்ளதாக மணிமங்கலம் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆறு மாதங்களாக படப்பை,ஆதனூர் நூதனஞ்சேரி, மணி மங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள தனி வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் நடப்பதாகவும் மணிமங்கலம் காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லை என்பதால் குற்ற சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்றும் புகார் கூறுகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments