டெல்லியில் சைபர் குற்றங்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மையத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் அமித் ஷா
சைபர் குற்றங்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மையத்தை இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்கும் அமித் ஷா, சைபர் குற்ற தடுப்பு மையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
வங்கிகள், நிதி இடைத்தரகர்கள், பணம் செலுத்துவோர், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், தகவல் தொழில்நுட்ப இடைத்தரகர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்ட அமலாக்க முகவர் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இந்த நிறுவனம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் நிதிக் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை மற்றும் தடையற்ற ஒத்துழைப்புக்காக அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.
Comments