குட்கா வழக்கு - சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆஜர்... வழக்கு விசாரணை செப்.23க்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைப்பு

0 632

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டடோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 2020 ஆண்டு மாதவராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, தற்போது முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை நகல் தயாராகாததால் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments